Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 24, 2016

வாரணாசியில் மோடி வாகனம் மீது துண்டுச்சீட்டு வீசிய வாலிபர்!



பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அங்கு கபீர்நகர் பகுதிக்கு அவர் வந்தபோது சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்றனர்.

அப்போது அந்த வழியே பிரதமர் மோடி பயணம் செய்த காரும், பிற வாகனங்களும் கடந்து சென்றன.

அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு துண்டுச்சீட்டை மோடியின் வாகன அணிவகுப்பின்மீது வீசினார். உடனே உஷாரான போலீசார், அந்த வாலிபரை பிடிக்க பாய்ந்தனர். ஆனால் அவர் நைசாக நழுவி தப்பி விட்டார்.

அவர் தலையில் மப்ளர் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த துண்டுச்சீட்டு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதை வீசிய வாலிபர் தன்னை ‘அபினவ் திரிபாதி, சமூக ஊழியர்’ என்று சுய அறிமுகம் செய்துகொண்டு, பிரதமர் மோடியின் வாரணாசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பதிவு செய்வதாக கூறி உள்ளார்.

வாரணாசியில் நடைபெறுகிற பல்வேறு அவலங்களையும் அந்த துண்டுச்சீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.