December 18, 2016
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நாம் தமிழர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்ககோரி நாம் தமிழர் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற இன்னும் முப்பது நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி நடத்த காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நாம் தமிழர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.