Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

பூச்சிமருந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை



கள்ளக்குறிச்சி அருகே கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த சுலோச்சனா என்பவர், கடந்த 2012 ஆம் ஆண்டில், தமது கணவர் முத்துவை மதுவில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சுலோச்சனாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியெட் புஷ்பா, கணவரை கொலை செய்த சுலோச்சனாவிக்கு ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.