December 29, 2016
ஜெயலலிதாவை "நிரந்தர பொதுச் செயலாளர்" என அழைத்தது சும்மாதான் - பொன்னையன்
ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என அழைத்தது சும்மா ஒரு பாசத்தில் தான் , கட்சியில் நிரந்தர பொதுச் செயலாளர் என்பது இல்லை - பொன்னையன்
சென்னையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அழைத்தார்களே? நிரந்தர பொதுச்செயலாளர் என்ற விதி முறையில் மாற்றம் செய்யப்படுமா?
பதில்:- அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில் ‘நிரந்தர பொதுச்செயலாளர்’ என்ற முறையே இல்லை. பொதுச்செயலாளர் தான். நாங்கள் மறைந்த முதல்-அமைச்சரை பாசத்தின் மிகுதியால் அவ்வாறு அழைத்தோம். கடந்த காலங்களில் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இருந்து இருக்கிறார்கள். எனவே அது பிரச்சினை இல்லை.
கேள்வி:-பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி இருக்கிறதா?
பதில்:-பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியே இல்லை. இதுவரை யாரும் மனுக்கள் கொடுக்கவில்லை. பொதுச்செயலாளரை பொதுக்குழுவே தேர்ந்தெடுக்கும். பொதுக்குழு நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கேள்வி:- பொதுக்குழுவுக்கு சசிகலா வருவாரா? அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா?
பதில்:- அவர் வருவதில் என்ன தடை இருக்கிறது? அ.தி.மு.க.வில் அனைத்து அமைப்புகளும் சசிகலா பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று தான் விருப்பம் தெரிவித்து இருக்கிறது.
ஜெயலலிதாவை "நிரந்தர பொதுச் செயலாளர்" என அழைத்தது சும்மாதான் - பொன்னையன்
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.