Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 10, 2016

உல்லாசமாக இருக்க வீடு கொடுத்த துணை நடிகையை காதலனுடன் சேர்ந்து தோழியே கொலை செய்தார்..!!



சென்னை சாலிகிராமத்தில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சினிமா துணை நடிகை ஜெயா படுகொலை செய்யப்பட்டார்.  சாலிகிராமம் போலீசாா்  வழக்கு பதிந்து விசாரனை விசாரணை செய்து வந்தனா்.

இந்துத நிலையில் போலீசாா் நடிகை தங்கியிருந்த வீட்டின் சிசிடிவி கேமராவை சோதித்தனர்.

கொலை நடந்த அன்று ஒரு ஆணும், பெண்ணும் கொலை செய்யப்பட்ட ஜெயாவின் வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

ஆட்டோவின் நம்பரை வைத்து ஆட்டோ டிரைவர் சிராஜுதினை பிடித்தனர். ஆப்போது நடந்த விசாரணையில் தனது காதலியும், துணை நடிகையுமான அசினாவுடன் சேர்ந்து ஜெயாவை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

சிராஜூதீனையும் அவரது காதலி அசினாவையும் போலீசார் கைது செய்தனர். அப்போது விசாரணையில் அவர்கள் கூறியதாவது,

ஜெயா என்னுடைய நெருங்கிய தோழி. எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நாங்கள் சில ஆண் நண்பர்களுடன் ஜெயா வீட்டில் உல்லாசமாக இருப்போம். இதற்கு அவள் வீடு நன்றாக பயன்பட்டது.

ஜெயாவின் வீட்டை இந்த வேலைக்கு பயன்படுத்துவதால் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வாள். அவளும் தனது வீட்டில் பணம், நகைகளை அதிகம் வைத்தருந்தார். இதனை பார்த்தவுடன், பணம் நகையை கொள்ளையடிக்க பிளான் செய்து அன்று அவர் வீட்டுக்கு போனோம்.

அவள் வெளியே சென்ற நேரமாக பார்த்து பணம் நகையை எடுத்துக் கொண்டிருந்தோம்.  அவள் வந்துவிட்டாள்.

இனி உல்லசமாக இருக்க வீடு கொடுக்கமாட்டாள்.  இனிவேறு இடமும் கிடைக்காது என்று கருதி அவளை கழுத்தை நெறித்து கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.