கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அந்தத் தீர்மான நகலுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை வழங்கி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக மட்டுமின்றி, தமிழக முதல்வராகவும் சசிகலா வருகிற தைப் பொங்கலுக்குப் பிறகு பதவியேற்கலாம் எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்போது அதில் போட்டியிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்து வருகிறார். 1 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் காட்டும் வழியில் விசுவாசத்துடன் அரசியல் பயணம் தொடருவோம்.
சின்ன அம்மா அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதல்வராகவும் ஆக வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
கங்கா சந்திரமுகி அறைக்கு போனா.... சந்திரமுகியா நின்னா... நடந்தா... இப்போ முழுசா சந்திரமுகியா மாறிட்டா... புரிஞ்சவன் பிஸ்தா... இதுதான் இப்போது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகிறது. போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்த வி.கே. சசிகலா, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர விரும்பினார். அது மட்டும் போதுமா? தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று யார் சொன்னார்களோ இப்போது ஓபிஎஸ்க்கு எதிராக சில அமைச்சர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். இது அதிமுவிற்கு நல்லதா? கெட்டதா?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.