Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

ராம மோகன ராவ் மகன் விவேக்கிடம் விடியவிடிய விசாரணை


முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மகன் விவேக் ேநற்று மாலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். மணல் குவாரி உரிமையாளர் சேகர் ரெட்டியிடம் நடத்திய  விசாரணையை தொடர்ந்து கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் வருமான வரித்துறையினர் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதைதொடர்ந்து வருமான வரித்துறையினர் கடந்த 24ம் தேதி ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோருக்கு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்க நகைகள் குறித்து நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் ராம மோகன ராவ் நெஞ்சு வலி என்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று பின்னர் வீடு திரும்பினார். இதற்கிடையே 6 நாட்களுக்கு பிறகு ராம மோகன ராவ் மகன் விவேக் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ேநற்று மாலை 3.50 மணிக்கு வந்து அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மாலை 4 மணி முதல் வீடு மற்றும் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்துகள் குறித்தும் அவற்றை வாங்கியது குறித்தும் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இந்த  விசாரணை விடியவிடிய தொடர்ந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.