December 14, 2016
திருமணமாகாமல் பிறந்ததால் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த தாய்
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் என்ற இடத்தில் சிலர் காட்டு பகுதிக்கு சென்றனர். அப்போது தெரு நாய்கள் ஒரு இடத்தில் மண்ணை தோண்டி கொண்டிருந்தன. உடனே அங்கு சென்று பார்த்தனர்.
அதில் ஏதையோ புதைத்திருப்பது தெரிந்தது. எனவே அதை தோண்டி பார்த்தனர். அதில் அப்போது தான் பிறந்த குழந்தை உயிரோடு இருந்தது. உடனே அந்த குழந்தையை வெளியே எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது.
இந்த குழந்தையை யார் இங்கு கொண்டு வந்து புதைத்து என்பது பற்றி அறிவதற்காக ஊர் பஞ்சாயத்து கூடி விசாரணை நடத்தியது. அப்போது அந்த ஊரைச்சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை இவ்வாறு புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனாலும் கள்ளக்காதல் காரணமாக அவர் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய அவர் குழந்தை பிறந்ததும் மண்ணில் தோண்டி உயிரோடு புதைத்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகாமல் பிறந்ததால் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த தாய்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.