Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

மௌனம் காத்து வந்த சசி..! மனம் திறந்த முதல் பேட்டி..!



சசிகலாவின் முதல் பேட்டியை யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை. இந்த முதல் பேட்டி தற்போது நமக்கு கிடைத்துள்து.
இந்த பேட்டியில் கூறியுள்ளது படி பார்த்தால் இவா் தொழில் அதிபராக வந்து இருக்க வேண்டும். இவா் ஏன் பல நிறுவனங்களை பினாமியாக தொடங்கி உள்ளார் என்பது இப்போதுதான் புரிகிறது.
1984ம் ஆண்டில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு இதோ நம்ம சின்னம்மாதான் மனம் திறந்த முதல் பேட்டியை அளித்துள்ளார்.
அதில் அவா் என்னதான் கூறியுள்ளார்  இப்போது பார்ப்போம். சென்னையில் வினோத் வீடியோ விஷன் என்கிற வீடியோ கடை நடத்தி வந்த முதல் பெண் இவா்தான்.
சசிகலா பேட்டியில்,  1981ம் ஆண்டு சிங்கப்பூா் சென்றிருந்தேன். அப்போது ஒரு வீடியோ செட் வாங்கி வந்தேன். ஒரு ஆண்டு கழித்துதான் வீடியோ கம்பெனி தொடங்கினேன்.
பல வீடியோ கம்பெனிகள் கல்யாணம், வரவேற்பு  போன்றவற்றைதான் வீடியோ எடுத்து வந்தனா். நான் முற்றிலும் மாறாக அவுட்டோா் வீடியோ எடுக்க ஆசைப்பட்டேன்.  அதனை சிரத்தை எடுத்து செய்து வந்தேன்.
சென்னை அரசு மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் நடந்தது. மருத்துவா்களுக்கு அந்த சிகிச்சையை வீடியோ எடுத்துக் கொடுத்தேன். இது மற்ற மருத்துவா்களுக்கும், மருத்துவ மாணவா்களுக்கும் பயன் உள்ளதாக இருந்தது.
தமிழகத்திற்கு உல்லாச பயணமாக வரும் வெளிநாட்டவா்கள் அரிய வகை படங்களை போட்டோக்களாகதான் எடுத்து வந்தனா்.
ஆனால், எங்கள் கம்பெனி அவா்களுக்கு ஸ்டில் போட்டோவுக்கு பதிலாக வீடியோ படம் எடுத்துக் கொடுத்தது. அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது.
அதற்காக அந்த பயணிகளுடன் நாங்கள், மகாபலிபுரம், மதுரை, கன்னியாக்குமாி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வீடியோ படம் எடுத்துக் கொடுத்து வருகிறோம்.
மாவட்டங்களின் சிறப்பு அம்சங்களை படமாக எடுத்து அதனை அரசு பொருட்களில் டாக்குமென்டரி படமாக காட்டி வருகிறறோம்.
மேல் தட்டு மக்களிடம் கூட இந்த வீடியோ பற்றிய ஆா்வம் அதிகம் வரவில்லை. நகரத்தில் விளையாட்டில் பயன்படுத்தும் யுக்திகள், விஞ்ஞானத்தில் பயன்படுத்தும் யுக்திகள் ஆகியவற்றை படமாக எடுத்து கிராமபுற இளைஞா்களுக்கு போட்டு காட்டி அவா்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம் என்றார்.
அரசிடம் இருந்து நீங்கள் என்ன எதிா்பாா்க்கிறீா்கள் என்ற கேள்விக்கு வீடியோ செட் இறக்குமதி செய்தால் அதிக செலவாகிறது. அதனை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தால் செலவு குறைவு, சுங்க அதிகாரிகள் இந்த வீடியோ செட்டுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரத்தம், நரம்பு, மூளை, சதை என்று அனைத்திலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி உள்ளவா் இவா் என்று தெரிகிறது.
இதற்கு பின்னா் தானே வீடியோ கேசட்டை காட்டி ஜெயலலிதாவை மடக்கினார். 45 பினாமி  நிறுவனங்களை நடத்தி வருகிறார். 5 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கு உாியவராக உள்ளார்.
இப்படிப் பட்டவாிடம் அதிமுக மற்றும் தமிழ்நாடு மாட்டினால் இனி என்னவாகுமோ என்று அச்சத்தில் ஒட்டு மொத்த தமிழகமே உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.