Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

மத்திய அரசுக்கு திராணி இருந்தால் இதயெல்லாம் செய்யுமா?


மத்திய ரிசர்வ் காவல்படையின் உதவியுடன் தமிழக தலைமைச் செயலகத்திலேயே ரெய்ட் செய்த வருமான வரித்துறை மற்றும் சிபிஐ யையும் மனமாற பாராட்டுவோம்...

அதே போன்று பின்வரும் வழக்குகளிலும் இதே போன்று நடவடிக்கையை எதிர்பார்ப்போம்...

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அவருடைய மகன் அபிசேக் வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளார் -  'பனாமா பேப்பர்ஸ்'

அமிதாப், ஐஸ்வர்யா  மற்றும் அதானியின் அண்ணன் வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளனர் - பனாமா பேப்பர்ஸ்

3600 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீதான தடையை நீக்கிய மத்திய அரசு

அதானியின் நிறுவனத்திற்கு மிக குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டு, அதானியின் நிறுவனத்தால் மீண்டும் அரசு நிறுவனங்களுக்கு அதிக வாடகைக்கு கொடுக்கப்படும் அரசு நிலங்கள்...

ஒரு சில தனியார் நிறுவனங்களின் வராக்கடன் லட்சம் கோடிகள் இருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் பெறும் இரகசியம்..

ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் இருந்தும் அசால்டாக வெளிநாடு தப்பிச் சென்ற மல்லையா....

சிறுமிகளை  கற்பழித்த கிழட்டு சாமி ஆசரம் பாபு, மர்மமாக தொடர்ந்து கொல்லப்பட்ட அந்த வழக்கின் சாட்சிகள்...

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மெகா வியாபம் ஊழல்.. அந்த வழக்கில் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்டோரின் மர்ம மரணம், மர்டர் பிரதேசமாகவே மாறிப்போனது மத்தியப்பிரதேசம்....

அதானி பருப்பு வியாபாரம் செய்வதற்காக வெளிநாடு சென்று ஒப்பந்தம் போட்ட பிரதமர், அதைத் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் பருப்பு விலை, அதில் ஒளிந்துள்ள ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் கோடி ஊழல்...

அரசிற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து 11000 கோடி இயற்கை எரிவாயுவை ஆட்டையப் போட்ட அம்பானி...

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பாபா ராம்தேவிற்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள 5000 ஹெக்டேர் அரச நிலம்...

மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது 25000 கோடி அரசின் செலவினங்களுக்கு சரியான கணக்கு இல்லை என்ற தணிக்கை துறையின் அறிக்கை...

ரிலையன்ஸ் நிறுவனமே இலட்சம் கோடி கடன் வைத்திருக்கும் பொழுது அந்நிறுவனத்திற்கே மாணவர் கல்விக்கடன் வசூலிக்கும் அதிகாரம் கொடுத்தது...

அதானிக்கு விதிக்கப்பட்ட 200 கோடி அபராதம் ரத்து...

மோடியின் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் 45000 கோடி ஊழல் நடந்ததாக கூறியுள்ள தணிக்கைத்துறை...

அதானியின் 5500 கோடி இறக்குமதி மோசடி,  அதை கண்டுபிடித்த கஸ்டம்ஸ் அதிகாரி மீதே வழக்கு பதிவு..

இதையெல்லாம் மூடிமறைக்க ஆயிரக்கணக்கான கோடிகள் செலவில் பத்திரிக்கைகளுக்கு அரச விளம்பரம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.