December 3, 2016
விளம்பரங்களுக்கு பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தினாள் எவ்வளவு அபராதம் தெரியுமா? - சும்மா அசந்து போவீங்க
விளம்பரங்களில் மோடி புகைப்படம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்கள் முன்பு, 4ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதனை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அந்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததைக் கண்டு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி எழுப்பியதால், இவ்விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது.
இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியது பற்றி தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரிடம், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி., நீரஜ் சேகர், கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்து மூலமாகப் பதில் அளித்த அமைச்சர் ரத்தோர், ஜியோ நிறுவனம் பிரதமரின் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், அந்நிறுவனத்திற்கு அத்தகைய சிறப்பு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் , ஜியோ நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, அரசு அதிகாரிகளின் பெயர், புகைப்படம் மற்றும் அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் தண்டனைச் சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு, ரூ.500 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரங்களுக்கு பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தினாள் எவ்வளவு அபராதம் தெரியுமா? - சும்மா அசந்து போவீங்க
Reviewed by மறத்தமிழன்
on
December 03, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.