Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

பெரியார் - எம்ஜிஆர் நினைவு நாள்: முதல்வர், தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி



பெரியார், எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு நாளையொட்டி, அவர் களது நினைவிடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தந்தைப் பெரியாரின் 43-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் அக்கட்சி யின் பொதுச் செயலாளர் க.அன்பழ கன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன் உள்ளிட்டோர் மாலை அணி வித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் ஆகியோ ரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோ ரும் அஞ்சலி செலுத்தினர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பெரியார், எம்ஜிஆர் உருவப் படங்களுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் மலர்தூவியும், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 29-வது நினைவு தினமும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, தலைமை நிலைய நிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் எம்ஜிஆர் நினை விடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.