மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இறந்தும் போனார்..!
ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கத்திற்கு பிறகு அவரின் இறப்பு குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமாக பரவி வருகிறது.
இதனால் தமிழக மக்களும், அதிமுகவினரிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுப்பதற்கான சலசலப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலே குறித்து வாட்ஸ்அப்பில் அதிர்ச்சி தகவல் வைரலாக பரவி வருகிறது. அந்த தகவலில், ‘‘பிரபல டாக்டர் என்ற போர்வையில் வந்தவர் யார்? விசாரணையில் கிடைத்த உண்மை.
ரிச்சர்டு பீலே இங்கிலாந்தில் மீன் மற்றும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலை நடத்துபவர்.
ஒரு வருடம் வரை மீன், இறைச்சியை துளியும் கெடாமல் பாதுகாப்பதில் வல்லவராம். இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த போது அவரது உடலை ஒரு மாதம் கெடாமல் இருக்க எம்பாமிங் செய்தவர் இந்த ரிச்சர்டு பீலே’’ என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது இந்த தகவல் உறுதிப் படுத்தப்பட்டதாகவும், சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தால் அந்த டாக்டரும் விசாரணை வளையத்தில் மாட்டுவார் என்கிறார்கள். அது மட்டுமல்ல லண்டன் டாக்டரும் தான் அளித்த சிகிச்சை பற்றிய தெளிவான அறிக்கை கொடுத்தே ஆகவேண்டும் என்கிறார்கள்…!
அன்பு லைவ்டே நண்பர்களே..நாம் யாரும் அப்போல்லோவின் உள்ளே போய் பார்த்ததே இல்லை..!
ராகுல் காந்தி..தமிழக கவர்னரே கூட அம்மாவை உள்ளே போய் பார்த்தது இல்லை. அவ்வளவு சீக்ரெட்டாக அம்மாவை வைத்திருந்தனர்..!
அம்மா இறந்த பின்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளது.இதில் எதெல்லாம் உண்மை..எது பொய் என்பது மருத்துவமனை டாக்டர்களுக்கும்..சசிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்…!
அவர்கள் தெளிவான அறிக்கை ஒன்றை..உள்ளது உள்ளபடி சொன்னால் மட்டுமே இது போன்ற செய்திகளை தடுக்கவோ ..தவிர்க்கவோ முடியும்..!!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.