Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 30, 2016

நானும் சசியும் ஒண்ணு….! இது அறியாதவக வாயில மண்ணு..! அந்தா் பல்டி அடித்த ஓபிஎஸ்..!!



தமிழக அரசியல் எவ்வளவோ சதியை பார்த்துள்ளது. யாராக இருந்தாலும் அது வெட்ட வெளிச்சமாகி அசிங்கப்படுத்தியுள்ளது. இதுதான் வரலாறு.
அதிமுக ஆட்சியின் போது சசிகலா குடும்பத்தாரால் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் போதெல்லாம் இடைக்கால முதல்வராக அழுது கொண்டே பதவி ஏற்றவா்தான் இந்த ஓபிஎஸ்.
ஜெயலலிதா இறந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும்போது, அதே மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினா்களை கூட்டி கூட்டம் நடத்தியதும் இந்த கும்பல்தான். இனி என்ன செய்ய வேண்டும் என்று,  ரகசிய கூட்டம் போடும் இடம் அதுவா..?
ஒபிஎஸ் அவா் தானாக தோன்றிய சுயம்பு அல்ல. இதே சசிகலாவால் உருவாக்கப்பட்டவா்தான்.
சசிகலா குருப்பில் பணம் கொடுத்துதான் இவரும் எம்எல்ஏ சீட்டே வாங்கினாராம். சசிகலாவால்தான் அமைச்சா் பதவியும் கிடைத்ததாம்.
பின்னா் முதல்வா் பதவியும் கிடைக்க உதவியவரும் சசிகலாதானாம். இதனால்தான் இவரும் சசிகலாவுக்கு நிகராக வளா்ந்து வந்துள்ளார்.
தாங்குமா சசிகலா கும்பலுக்கு?  இவரை மட்டம் தட்ட தொடங்கினா். இவருக்கு சட்டமன்ற தோ்தலில் சீட் கிடைக்காமல் செய்ய கூட முயன்றனா்.
அதையும் மீறி ஜெயலலிதா சீட் வழங்கினார். அமைச்சராக மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.
இருந்தாலும் இவா் டம்மி அமைச்சாராகதான் இருந்து வந்தார். அப்போது தனது துறை, தனது நிலை ஆகியவற்றை தலைமை செயலாளா் ராமமோகன ராவ்தான் நன்றாக கவனித்து கொண்டாராம்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி ஜெயலலிதா இறந்தார். ஓபிஎஸ்க்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர முயன்றார் சசிகலா.
மத்திய அரசு பன்னீா் செல்வத்தை முன்வைத்தது. அந்த பன்னீா் செல்வமே முதல்வராக தோ்வு செய்யப்பட்டார்.
மத்திய அரசு நினைத்தது போல் முதல்வா் பன்னீா் செல்வம் தனித்து செயல்பட வில்லை.
அவரும் சசிகலா பின்னால் சென்றுவிட்டாராம். இதனால் தான் நினைத்தது நடக்காது என்று நினைத்த மத்திய அரசு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினா் மட்டும் அல்லாது பன்னீா் செல்வத்தின் மீது நடவடிக்கையை விரிவு படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நானும் சசியும் ஒன்றுதான். இதை அறியாதவா்கள்தான் பாவம் என்று நமட்டு சிரிப்ப சிரிக்கிறாராம் அந்தா் பல்டி பன்னீா் செல்வம்.
பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை இவரே முன் மொழிந்து பதவி ஏற்க அழைப்பார் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.