தமிழகத்தை மூன்று முறை முதல்வராக இருந்து ஆண்ட செல்வி.ஜெ. ஜெயலலிதா உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் சென்னை போயஸ் கார்டன் எடுத்து வரப்பட்டு, சமுதாய சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை 4.30 மணி ஜெ.,இறுதி ஊர்வலம் புறப்பட்டு, 5.45 மணிக்கு மெரினா கடற்கரை வந்து சேர்ந்தது.
ஜெ.,உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 12 வீரர்கள் 5 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளித்தனர். அதை தொடர்ந்து இறுதி சடங்குகளை வைணவ முறைப்படி சசிகலா செய்தார். ஜெ.,யின் ரத்த சொந்தம் யாரையும் அருகே விடவில்லை. அருகே ஒரு இளைஞர் இருந்தார். அவர் யார் என தெரியவில்லை.
அதை தொடர்ந்து சந்தன பேலையில் வைத்து சமாதியில் ஜெ.,உடல் புதைக்கப்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.