நன்பேன்டா......
, நாகர்கோவில் அருகே நண்பனுக்கு திருமணம் செய்ய பேசிய பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருமண பேச்சுநாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், லேப்-டெக்னீசியன் படித்துள்ளார். அவர் ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கும், கருங்கல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமண பேச்சுவார்த்தை தொடங்கி, நடந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில், அந்த வாலிபர் தனது நண்பரான கருங்கல் அருகே உள்ள வள்ளியாவிளையை சேர்ந்த ஜோசப் அஜின் (வயது 24) என்பவரிடம், தனக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறும் விஷயத்தை கூறினார். மேலும் அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும், ஜோசப் அஜினிடம் கொடுத்ததாக தெரிகிறது.நண்பன் மோசமானவர்இதனையடுத்து ஜோசப் அஜின், அந்த பெண்ணிடம், தங்களுக்கு கணவராக வரப்போகிறவரின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு செல்போனில் பேசத்தொடங்கினார். அப்போது, ‘உனக்கு கணவராக அமைய உள்ள எனது நண்பன் மிகவும் மோசமான பழக்க வழக்கங்களை உடையவன். எனவே அவனை திருமணம் செய்யாதே’ என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் நலம்விரும்பி போன்றும், நண்பனை மோசமானவர் போலவும் சித்தரித்து பேசியுள்ளார்.இதனை அந்த பெண் நம்பியதாக தெரிகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜோசப் அஜின், அந்த பெண்ணின் அழகை வர்ணித்தும், அவரை தனக்குப்பிடித்திருக்கிறது என்றும் ஆசைவார்த்தைகளை கூறினார்.கற்பழிப்புஇந்தநிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்து அங்கு சென்ற ஜோசப் அஜின் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் அலறினார்.இதனால் பயந்துபோன ஜோசப் அஜின், அவரது வாயை பொத்தி, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. முதலில் இதுகுறித்து அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். ஆனால் ஜோசப் அஜின் திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். அந்த பெண் அவருக்கு போன் செய்தாலும் பேசுவதில்லை.கைதுஇதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் ஜோசப் அஜினை நேற்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.கைதான ஜோசப் அஜினுக்கு திருமணம் ஆகவில்ல


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.