
தமிழக அரசியலில் ஒரு தலை போனதோ இல்லையோ. மத்திய அரசின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாதான் போயிடுச்சு.
தமிழக அரசியலில் ஜெயலலிதா 34 வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளார்.
இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசியபோது, அந்த அலை தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை.
தமிழகத்திற்க நன்றாக கால் ஊன்ற என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த பிஜேபிக்கு ஜெயலலிதா இறந்தது ஒரு வாய்ப்பாகத்தான் போய்விட்டது.
இரும்பு பெண்மணி ஜெயலலிதா வாஜ்பாயுடன் கூட்டணி கண்டார். முதல் முறையாக பா.ஜ.க ஆட்சி மத்தியில் அமைந்தது.
அது ஜெயலலிதாவிற்கு பிடிக்காமல் போக கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டார்.
11 நாட்கள் ஆயுசே வாஜ்பாய் அரசுக்கு கிடைத்தது. இது பிஜேபியின் மனதில் கொளுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.
ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக ஆட்சியில் அவா்கள் பதவிக்காக அடித்துக் கொள்வார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று காத்து இருந்தது அதுவும் நடக்கவில்லை.
மத்தியஅரசின் கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பணத்திற்காக மக்கள் நீண்ட வரிசையில் வங்கியில் நின்று பலா் இறந்து போய்விட்டனா்.
பணம் டெபாசிட் செய்வதிலும் கெடுபிடி காட்டியது இதனாலும் மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் அவ பெயா்தான்.
மத்திய அமைச்சா்கள் கோடி, கோடியாக பணம் செலவு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வருகின்றனா்.
ஆனால், ஏழைமக்கள் டீ, காப்பி மட்டுமே கொடுத்து திருமண செலவு செய்யும் நிலையும் வந்தது.
தமிழகத்தில் மாநில கட்சிகளை ஓரம் கட்ட முடிவு செய்து கோல் கீப்பரே இல்லாத எதிர் அதிமுக ஆதரவாளா்களிடம் தொடா்ந்து வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை அமைச்சா்கள் முதல் மிக முக்கிய அதிமுகவினர் வரை தொடரும் என்று நம்பப்படுகிறது.
அதிமுக அரசுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
இனி எப்படி செய்தாலும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. அப்படி முயற்சி செய்தால் நகைச்சுவை நடிகா் வடிவேலு இங்கு இருக்கிற தமிழகத்தை அப்படியே டெல்லி பக்கம் மாத்தி வைத்தால் அதுக்கு வாய்ப்பு இருக்கும்.
என்ன செய்தாலும் அதிமுக அல்லது திமுகதான் என்பது தமிழகத்தின் நிலை. இவ்வாறு தமிழக மக்கள் பேசி வருகின்றனா்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.