Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

தன் மீதான தாக்குதலுக்கு சிலரது தூண்டுதலே காரணம் - வைகோ



திமுகவினர் தன் மீது தாக்குதல் நடத்த, சிலரது தூண்டுதலே காரணம் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு பேட்டியளித்த அவர், கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி அறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக கூறினார். கருணாநிதியை தான் சந்திக்க வருவது குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனை அறிந்துக் கொண்ட சிலர் திட்டமிட்டு, மருத்துவமனை பகுதியில் தொண்டர்களை குவித்து, தாக்குதல் நடத்தியதாகவும் வைகோ புகார் கூறினார்.
கருணாநிதி உடல்நலம் பெற்று, வழக்கமான பணிகளை மீண்டும் தொடர, இயற்கை தாயை தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட வைகோ, நடந்த சம்பவத்தை மதிமுக தொண்டர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.