அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மான நகலை முதல்வர் பன்னீர் செல்வம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினார். இதனையடுத்து சசிகலாவும் பொதுச்செயலாளராக பதவி ஏற்பதாக உறுதி அளித்து உள்ளார்.
பொதுச்செயலராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பு ஏற்று கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
அதோடு ஜெயலலலிதா மறைவால் மனமுடைந்து தற்கொலை மற்றும் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை சசிகலா சந்திக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.