December 26, 2016
ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா
தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டு
இட்லி அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - ¾ கப்
தேங்காய் - ஒரு கைப்பிடி
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
மோர் மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* கீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) நன்றாக சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
* இட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
* இட்லி ஆறியவுடன் அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு உதிரிவாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.
* சத்தான கீரை உப்புமா தயார்.
* இது மிகவும் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டியாகும். இந்த கீரை உப்புமாவை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.