Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

“சசிகலா புஷ்பா..தீபாவுடன் களம் இறங்கு…!” தீபா முதல்வர்.. நீ துணை முதல்வர்…! ஆட்டம் ஆரம்பம்..!!



வேட்டை …வேட்டை..வேட்டைடா…..!! அவ்வளவு எளிதாக சசியை பதவி ஏற்க விட்டு விடுமா டெல்லி?
அம்மா பிரதமரின் ஆத்மார்த்தமான தோழி, சகோதரி போன்றவர். பல இக்கட்டான சூழலில் தனது தோழியைக் காத்தவர் பிரதமர்…!
ஆனால், ஜெ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்  இருந்தே முழுக்க சசியின் கட்டுப்பாட்டிற்குள் போய் விட்டார் ஜெ.,
கவர்னர் மூலம் டெல்லி, பெரிய அழுத்தங்கள் கொடுத்த பிறகுதான் சில உண்மைகளை டெல்லிக்கு சொன்னார்கள்.
இதில் டெல்லித்  தலைமை அப்செட் மூடில் தான்  இருந்தது. இன்னும் அப்படிதான் இருக்கிறது.   இந்த நிலையில் சொந்த அண்ணன் மகளைக்  கூட அடித்து விரட்டிய கொடுமை, தமிழக மக்களை மட்டுமின்றி இந்தியாவையும் உலுக்கி எடுத்தது.
டெல்லி தலைமை இதை ரசிக்கவில்லை என்கிறார்கள். அதே போல தீபாவிற்கு ஆபத்து இருக்கிறது என்று கூறியதாம் மத்திய உளவுப் பிரிவு. மேலும் கடுப்பானது டெல்லி.
தீபாவை உடனடியாக பாதுகாத்து டெல்லியில் பத்திரப்படுத்தினார்கள். இப்போது தான் ஆட்ட ம் துவங்குகிறது.
சசிகலா புஷ்பா டெல்லியின் செல்லப் பிள்ளை. டெல்லி என்ன சொல்கிறதோ அதை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளை…!
தமிழ்நாட்டில் மிக செல்வாக்குள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்.டெல்லிக்கு ஒரு யோசனை தோன்றியது.
இப்போது சசிகலா புஷ்பாவையும்..அனுதாப அலையில் இருக்கும் தீபாவையும் சேர்த்து களம் இறக்கினால் என்ன…?
ஜெ. விற்கு இருந்த எல்லா ஆளுமைத்திறனும் தீபாவிற்கு ரத்தத்தில் கலந்த ஒன்று. தைரியமும் உடன் பிறந்தது. அனைத்தையும் விட ஜெ. போலவே பிரதமருக்கு நட்பு வட்டத்திலும் இருப்பார்.
எனவே, அனைத்து உதவிகளையும்   முழு ஆசிர்வாதமும் கொடுத்து அனுப்பிவிட ஆயத்தமாகி விட்டது என்கிறார்கள்…!
இப்போ தெரியுதா..மக்களே..பிரதமர், சசி தலையில்  என் கை வைத்தார் என்று…?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.