December 28, 2016
நாளை பொதுச் செயலாளராகிறார் சசிகலா..! தை முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..!! ஆயத்த வேலைகள் ஜ
தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு எவ்வளவு மாற்றங்கள்? அதிமுக விசுவாசிகள் மீது ஐடி ரெய்டு, கைது.
கைது தொடரும் என்கிற அச்சுறுத்தல், இனி சசிகலாவின் பக்கம் அதிமுகவினா் நிற்க தயக்கம் காடடுவா். இனி நாம் சொல்லும்படிதான் அதிமுக என்று நினைத்தது மத்திய அரசு.
அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதத்தில் அமைதி காக்கிறார், சசிகலா. அவரின் அமைதிக்கும் பல அா்த்தங்கள் உண்டு.
ஜெயலலிதா இறந்த உடனே அனைத்து எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிரா்வாகிகள், நகர, பேரூா் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளா்கள், கிளை செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரையும் சசி குடும்பத்தினா் சரி கட்டி விட்டனா்.
எது வேண்டும் என எதிர்ப்பார்த்தனரோ அதை அவா்களுக்கு கொடுத்து தான் ஆதரவாளர்களை சரிசெய்துள்ளனர்.
எதிர்ப்பார் என்று சந்தேகப்படும் ஆட்களுக்கு பொதுக்குழு அழைப்பிதழையே வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நாளை நடக்கும் பொதுக்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட உள்ளார்.
அதன் பின்பு வருகிற தை மாத்தில் ஒரு நல்ல நாளாக பார்த்து அவா் தமிழக முதல்வராக பதவியை ஏற்கவும் உள்ளார். அப்படி அவா் பதவி ஏற்கும் போது பன்னீா் செல்வம் துணை முதல்வா் பதவிக்கு வருகிறார்.
முதல் முறையாக ஜாதிக்கு ஒரு துணைப் பொதுச் செயலாளா் பதவியும் வழங்கி அனைத்து சாதியினரும் சரிகட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய அமைச்சா்கள் சிலருக்கு அமச்சரவை பதவியில் இருந்து கல்தா கொடுக்கவும் தயாராகி விட்டனா். தமிழகமே எதிர்த்தாலும் இதுதான் நடக்கும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை பொதுச் செயலாளராகிறார் சசிகலா..! தை முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..!! ஆயத்த வேலைகள் ஜ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.