வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. முதலில் இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்தார். பிறகு சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 3வது தளத்தில் ஜெ.எஸ்.ஆர். இன்ப்ரா டெக், எனும் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி நடத்தினார்.
இதில் நல்ல வரும் வருவே, காட்பாடி காந்திநகர் கிழக்கு 10வது குறுக்குத் தெருவில் மிகப் பெரிய பங்களா கட்டிக் கொண்டு அங்கு சேகர் ரெட்டி குடியேறினார். இந்த நிலையில் எஸ்.ஆர்.எஸ்.மைனிங் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கினார்.
தொடர்ந்து ரியல் எஸ்டேட், கட்டு மானம், மணல் குவாரி, நீர் மேலாண்மை, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் என தமிழ் நாடு அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் சேகர் ரெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அளவிற்கு அதிகமாக பணம் சேர்ந்ததையடுத்து, கிலோ கணக்கில் கட்டித் தங்கத்தை வாங்கி பதுக்கத் தொடங்கினார்.
இப்படி அவர் வாங்கிய நகை மற்றும் பணத்தை சென்னை மற்றும் காட்பாடியில் உள்ள வீடுகளில் சேகர் ரெட்டி வைத்தார். இந்நிலையில்தான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. சேகர் ரெட்டிக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வங்கி மேலாளர்கள் மற்றும் பைனான்சியர்கள் மூலம் சுமார் ரூ.40 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார் சேகர் ரெட்டி.
இதுபற்றி யாரோ ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி யாரோ ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 100 பேர் சேகர் ரெட்டியின் சென்னை, காட்பாடி வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும், சேகர் ரெட்டியின் உறவினரான சீனுவாசலு ரெட்டி, நண்பர்களான பிரேம் ரெட்டி மற்றும் ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ஏகப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் சிக்கியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையில் 50 கிலோ தங்க நகைகள் சிக்கியது. காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 100 கிலோவுக்கும் மேல் நகைகள் கிடைத்தது. நகைகளை பொறுத்தவரை சேகர்ரெட்டியின் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும் சுமார் 167 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றபோது சேகர்ரெட்டியின் காரில் ரூ.24 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இல்லாமல் ஒரு கார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளது. அதில் இன்னும் பல கோடி ரூபாய் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காட்பாடியில் 'சீல்' வைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் மற்றொரு வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வேலூர் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை இயக்குனர் முருகபூபதி தலைமையில் 5 கார்களில் 12 அதிகாரிகள் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்தனர். அவர்களுடன் பணம், நகைகளை மதிப்பீடு செய்வதற்காக 2 வங்கி அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். சேகர்ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயை அதிகாரிகள் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வரவழைத்திருந்தனர். ஜெயஸ்ரீ முன்னிலையில் ஒவ்வொரு 'சீல்' உடைக்கப்பட்டு பணம், நகைகள் எடுக்கப்பட்டன.
சனிக்கிழமை மாலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தம் 14 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடி வீட்டில் துருவி, துருவி சோதனையிட்டு நகை, பணம், பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கட்டப்பட்டு 6 டிராவல் 'பேக்'கு களில் அடைக்கப்பட்டன. இதில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.