December 25, 2016
பொதுச்செயலாளர் ஆகிறார் ஓ.பி.எஸ்..!? எதிர்ப்பை சமாளிக்க.. சசிகலா உருக்கமான கடிதம்..!!
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஆட்சியையும், கட்சியையும் யார் கைப்பற்றுவது என நிலவி வந்த போட்டியில் ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கட்சி பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் பல வழிகளிலும் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
வரும் 29 ம் தேதி நடக்கவிருக்கும் அதிமுகவின் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெ.,வின் மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வத்தின் அதிரடி நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிய வருகிறது.
இதனால், சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே தொண்டர்கள் போஸ்டர்கள், பேனர்கள் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிகிறது.
இதனால் யோசனை செய்த சசிகலா கட்சியில் இருக்கும் எதிர்ப்பை சமாளிக்க நடக்கவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடிதம் மூலம் தனது உருக்கமான பதிலை தெரியப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுச்செயலாளர் ஆகிறார் ஓ.பி.எஸ்..!? எதிர்ப்பை சமாளிக்க.. சசிகலா உருக்கமான கடிதம்..!!
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.