Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

ஒபிஎஸ்க்குதான் பொதுசெயலாளா் பதவி…! பெருகுது ஆதரவு அலை…!! சசிக்கு கிளம்புது எதிா்ப்பு அலை…!!!


அ.தி.மு.க., பொதுச்செயலாளராக, சசிகலா முயற் சித்து வரும் நிலையில், அவரது எதிர்ப்பாளர்கள் அதிகரித்து வருகின்றனா். அவரை பொது செயலாளராக ஏற்க மறுத்துவருகின்றனா்.

முதல்வர் பன்னீர் செல்வத்தையே, பொதுச் செயலாளராக்க வேண்டும் என, தொண்டா்கள்  ஆதரவு கொடி துாக்கி உள்ளனர்.

சசிக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட, மேல்மட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வா் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட எடப்படி பழனிச்சாமி மற்றும் தம்பிதுறை ஆகியோர், இவா்கள் எம்.எல்.ஏக்களுக்கு தலா 1 கோடி கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்களுக்கும் செமத்தியாக கவனித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து தொண்டா்கள் அம்மா அடையாளம் காட்டிய தமிழக முதல்வா் பன்னீா் செல்வம்தான் பொதுச் செயலாளா் பதவிக்கும் வரவேண்டும் என்று விரும்புகின்றனா்.

அதிமுக அரசின் கெட்ட பெயருக்கு ஒட்டு மொத்த காரணமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரையே  கூறுகின்றனா் அதிமுக தொண்டா்கள்.

மத்திய அரசும், பொதுச்செயலர் பதவிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் வருவதை விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, முதல்வருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இதன் வெளிப்பாடாக, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக, பேனர்கள் வைக்க துவங்கி உள்ளனர்.

விழுப்புரம்மாவட்டம், அவலுார்பேட்டை கடை வீதியில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து, நகர அ.தி.மு.க., செயலர், சாதிக் பாஷா பேனர் வைத்துள்ளார்.

அதில், ‘எம்.ஜி.ஆர்., வழியில், அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற ஜெ., தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக, மாற்றிக் காட்டினார்.  ஜெ., அடை யாளம் காட்டிய, பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, கட்சியை வழிநடத்த வேண்டும்’ என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும், முதல்வர் பன்னீர் செல்வமே, பொதுச்செயலாளா் பதவிக்கு வர வேண்டும் என, வலியுறுத்தி, பேனர்கள் வைப்பது மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவது துவங்கி உள்ளது.

புதிதாக எழுந்துள்ள இந்த தொண்டா்களின் புரட்சி பலிக்குமா 29ம் தேதிவரை காத்து இருக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.