கேட்கவே திடுக்கிடும்படியான செய்தி அது.அந்த புலானய்வு வார இதழில் அப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்கள்.
அதாவது எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்தபின் அதன் பிறகு அங்கு சமாதி எழுப்பவோ, கட்டிடம் எழுப்பவோ, சீரமைப்பு பணிகள் செய்யக் கூட யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த கடலோரப்பகுதி C.R.2 எனும் பகுதியின் கீழ் வருகிறது.அதாவது வளர்ச்சி அடைந்து விட்ட பகுதி இது.
இங்கிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை முழுக்கவே எந்தவித கட்டுமானங்களும் நடைபெறக் கூடாது.சீரமைப்பு பணி செய்வதாக இருந்தாலும் மத்திய அரசிடம் முன்பே அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.
இது குறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்தியாநந்த் ஜெயராமன் கூறும் போது எம்ஜிஆர் சமாதி இடம் பெற்றுள்ள பகுதியில் சமாதியோ,மணி மண்டபமோ, சீரமைப்போ பண்ண வேண்டுமானால் மதிய அரசிடம் பார்ம்:1 மூலமாக அனுமதி வாங்க வேண்டும்.
அந்த ஆவணத்தோடு திட்ட அறிக்கை,கட்டட மதிப்பீடு தங்கிய மேப் தயாரிக்க வேண்டும். அதன் பின் மாவட்ட அளவிலான C.R.சோன் குழுவில் இதே ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அவர்கள் அந்த மனுவை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை அதிகார மையத்திற்கு பரிந்துரைப்பார்கள்.
அவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் கூடுவார்கள்.அந்த மண்டல அதிகாரக் குழுதான் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆனால் அதற்கும் நிறைய கட்டுப் பாடுகள் இருக்கிறது.ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அம்மா இறந்த அன்றே அவசர அவசரமாக மெரீனா என்று முடிவு செய்து அடுத்த நாளே கொண்டு போய் அடக்கம் பண்ணிவிட்டார்கள்.
நியாயமாக ஜெ. உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் சமாதி அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. என்கிறார்.
அம்மா இறந்த பின்னாவது நிம்மதியா தூங்க விடுங்கப்பா..!?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.