December 18, 2016
நினைவாற்றலை மீட்கும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கருணாநிதிக்கு பராசக்தி படத்தை போட்டுக் காட்டிய மருத்துவர்கள்
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அங்கு அவருக்கு கொடுத்துவரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, கருணாநிதியின் பழைய நினைவுகளை அவருக்கு மீண்டும் நினைவுபடுத்தி, அவரது நினைவாற்றலை திரும்பக் கொண்டுவரும் வகையில் அவருக்கு, பராசக்தி திரைப்படத்தை லேப்டாப்பில் போட்டுக் காண்பித்தார்கள் மருத்துவர்கள். வெளியில் எல்லோரும் இதனைத்தான், கருணாநிதி பாட்சா படம் பார்த்தார் என்று செய்தி பரப்பினார்கள்.
ஆனால், கருணாநிதி பார்த்த சினிமா, பாட்சா அல்ல பராசக்தி. ஏனென்றால், கருணாநிதியின் நினைவிடுக்குகளில் ஏராளமான மறத்தற்கரிய நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும் பராசக்தி திரைப்படம் தொடர்பான பழைய நினைவுகள் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட வரலாறு என்பதில் பராசக்தி திரைப்படத்துக்கென தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.
நடிப்புக்கு அகராதியான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம்தான் பராசக்தி. முற்போக்கு சிந்தனைகளுடன் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்கள், பிற்போக்கு சிந்தனைகள், பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் போன்றவற்றை புரட்டிப் புறந்தள்ளும் நெருப்பு வசனங்களை கருணாநிதி அத் திரைப்படத்தில் தீட்டியிருப்பார்.
கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை சிவாஜிகணேசன் பேசி நடித்திருக்கும் காட்சிகள், காணும் அனைவரையும் இருக்கையின் நுணிக்கே இழுத்துவிட்டுவிடும். அந்தளவுக்கு உணர்ச்சி பொங்க வைக்கும் அளவுக்கு காட்சியில் நடிப்பும் வசனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.
பராசக்தி படம் என்பது, அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே அது வாழ்வில் மறக்க இயலாத வரலாற்று நினைவுகளின் தொகுப்பு ஆகும். எனவேதான், கருணாநிதியின் நினைவாற்றலை மீட்கும் சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு பராசக்தி திரைப்படத்தை மருத்துவர்கள் லேப்டாப்பில் போட்டுக் காட்டினார்கள்.
நினைவாற்றலை மீட்கும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கருணாநிதிக்கு பராசக்தி படத்தை போட்டுக் காட்டிய மருத்துவர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.