Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 13, 2016

அழகிரிக்கு புது பதவி…!! மு.க.ஸ்டாலினும் ஓகே…!! சீனியர்களுக்கு ஆபத்தா…!? அதிருது திமுக…!!



திமுகவில் மு.க. அழகிரி தென் மாவட்ட தளபதியாக இருந்து வந்தார். தென் மாவட்டங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.
அழகிரி எதையும் வெளிப்படையாக பேசுபவர். இவ்வாறு அவர் பேசிவருவதை திமுக தலைமை விரும்பவில்லை.
மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரிடம் தூபம் போட்டும், அழகிரி ஆதரவாளர்கள் இவரிடம் தூபம் போட்டும் இருவரையும் ஒட்ட விடாமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால், வாரிசு சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அழகிரியை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்கு அது வளர்ந்தது. திமுக தலைவரும் அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார்.
அழகிரி கட்சி விஷயங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டார். திமுக தலைவரையும் பார்க்க வருவதையும் நிறுத்திக் கொண்டார்.
உடல் நலம் சரியல்லாத நேரத்தில் அம்மா, அப்பாவை பார்க்க வந்தார். அவ்வாறு வந்தபோது சில தினங்களில்,  கருணாநிதி அழகிரியை பார்க்க வில்லை என்று கூறப்படுகிறது.
அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் சகோதரி செல்வி, அழகிரிக்காக திமுக தலைவர் கருணாநிதியிடமும், ஸ்டாலினிடமும் பேசினார். இதன் பலனாக சகோதரர்கள் இருவரும் இணைந்தனர். திமுக பொதுக்குழு 20ம் தேதி கூடுகிறது.
வீடு இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சிலர் கட்சியை வலைக்க முயலக்கூடும் என்பதால். பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவியோ, உதவி தலைவர் பதவியோ  வழங்கப்படும். அழகிரிக்கும் பதவி வழங்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது.
இதனால் திமுகவில் ஸ்டாலினுக்கு புது பதவி வரும்போது ஏற்கனவே பார்த்து வந்த பதவிகள் சில சீனியர்களுக்கு குறிப்பாக எ.வ.வேலு, ஐ.பெரியசாமி. கே.என்.நேரு போன்றவாகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்த்து இருந்தனர்.
அண்ணன், தம்பிகள் இணைந்தது இது போன்ற சீனியர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.