Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

ஜெயலலிதா சமாதி வரையில் தொடரும் அப்போலோ!


செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி ஜெயலலிதா மரணம் வரையில் 75 நாட்களும் அப்போலோவை சுற்றியே அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தது.

 தினமும் வி.ஐ.பி.கள் ஆஜர் என அப்போலோ, அரசியல் களமானது. ‘‘பேசுகிறார்... எழுந்து நடந்தார்... கிச்சடி சாப்பிட்டார்... காவிரிக்காக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்... கையெழுத்துப் போட்டு அறிக்கை விட்டார்’’ என அப்போலோவில் இருந்து வந்த செய்திகள் பல ரகம். உச்சபட்சமாக டிசம்பர் 4, 5 தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக அப்போலோ மீது அகில இந்திய மீடியாவின் பார்வை குவிந்தது.

டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. ஆனால், ஜெயலலிதாவின் சமாதி வரையில் அது விடாது போல. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி பேரிகார்டுகளை அடுக்கி பாதுகாப்பு வளையத்தை போட்டிருந்தது போலீஸ். அந்த பேரிகார்டுகளில் ஒன்றில் அப்போலோ விளம்பரம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.