தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு 2014–ம் ஆண்டு தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 8–ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால் விலங்குகள் நலவாரிய சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14–ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் தடை விதிக்கும்போது அறிவிக்கை மூலம் எப்படி அனுமதி வழங்கலாம்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு எதையும் மத்திய அரசு மீறவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு என்பது ரேசோ அல்து பொழுதுபோக்கு விளையாட்டோ அல்ல என்று கூறிய அவர், கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்கால விளையாட்டு என்று குறிப்பிட்டார்.
காளைகளுக்கு தேவையில்லாத துன்பத்தை ஜல்லிக்கட்டு தருவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் பால் கறப்பது கூட பசுக்களுக்கு துன்பம்தான். அதை நாம் தேவைக்காக செய்கிறோமே. அதேபோல ஜல்லிக்கட்டையும் கருதலாம். என வாதிட்டார்
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.