Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை கேலி செய்தால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் நேற்று கூறியதாவது:–

கேலி, கிண்டல் 

ஆங்கில புத்தாண்டையொட்டி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இன்று (சனிக்கிழமை) மாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் தரும் உணவுப்பண்டங்களை வாங்கக்கூடாது.

கண்காணிப்பு 

மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். போலீசார் வழக்கமாக உள்ள 4 ரோந்து வாகனங்கள் தவிர கூடுதலாக 5 ரோந்து வாகனங்களில் சுற்றி வருவார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம் இன்று மாலை முதல் தணிக்கை செய்யப்படும். வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதோ, தடை செய்யப்பட்ட ஒலிப்பானைகளை அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதலோ கூடாது.

நடவடிக்கை 

சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் பொது இடங்களிலோ அல்லது சாலைகளிலோ எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதியில்லை. அவ்வாறு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.