Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் இடம் பிடித்த ஜோடி திருமணம் இந்து மகாசபை எரிச்சல்


கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற  யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் தேர்வில் முதல் இடம் பிடித்தவர் டினா தாபி. இவர் சமீபத்தில் இதே தேர்வில் இரண்டாவது இடம் பெற்ற அத்தர் அமீர்-உல் ஷாபி கான் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்த திருமணத்திற்கு சில இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இது குறித்து  இந்து மகா சபை உறுப்பினர் அகில் பாரதிய,டினா தாபி பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்  இந்த திருமணத்தை  உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது கானை சமாதானபடுத்தி அவரை மதம் மாற செய்யவேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

உங்கள் குடும்பத்தின் இந்த முடிவு லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாக உள்ளது.இந்த திருமணத்திற்கு இந்த ஜோடி ஒத்து கொண்டால் கான் மத மாற்றத்திற்கு ஒப்பு கொண்ட பின்னரே திருமணம் நடக்க வேண்டும். இந்த மத மாற்ற ஏற்பாட்டிற்கு எங்கள் உறுப்பினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

இந்த கடிதம் டினா தாபியின் தந்தை ஜஸ்வந்த் தாபி முகவரி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்து மகா சபையின் தேசிய பொது செயலாளர் முன்னா குமார் சர்மா கூறும் போது.

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் தேர்வில் டினா சாதனை நிகழ்த்தியதும்  எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அவர் கானை திருமணம் செய்து கொள்ள எடுத்துள்ள முடிவு  எங்களுக்கு அதிர்ச்சியையும் மிகவும் வருத்ததையும் கொடுக்கிறது.என கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.