December 25, 2016
64 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி மரணம்: ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிரிழப்பு
64 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதி ஒரே ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி நஷ்வில்லி (வயது 88). இவரது மனைவி டோலரெஸ் (83). நஷ்வில்லி கொரியா போரின்போது அமெரிக்க படையில் பணியாற்றினார்.
அப்போது இருவரும் கடிதங்கள் வாயிலாக காதலித்துக் கொண்டனர். படைப்பிரிவில் இருந்து நஷ்வில்லி ஓய்வு பெற்றதும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள், 3 பேரக் குழந்தைகள், 8 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நஷ்வில்லி தம்பதி 64 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் 88 வயதாகும் நஷ்வில்லிக்கு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டது. இதற்காக வாஷிங்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மனைவியும் அருகில் இருந்து கணவருக்கு பணிவிடைகள் செய்தார்.
இந்த நிலையில் மனைவி டோலரெஸ்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் இருவரையும் தனித்தனி அறையில் வைத்து கவனித்து வந்தனர். பின்னர் டாக்டர்கள் ஒரே அறையில் அனுமதித்தனர்.
ஆஸ்பத்திரி படுக்கையிலும் நஷ்வில்லி தனது மனைவி கையைப்பிடித்தபடி இருந்தார்.
அவர்களது திருமண வாழ்க்கையின் 64-ம் ஆண்டு நிறைவு நாள் நெருங்கி வரும் நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு 9.10 மணிக்கு டோலரெஸ் உயிர் பிரிந்தது.
இந்த நிலையில் மறுநாள் மாலை 4 மணிக்கு கணவர் நஷ்வில்லி உயிரும் பிரிந்தது. அடுத்தடுத்து ஒரே ஆஸ்பத்திரியில் கணவன்-
மனைவி உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
64 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி மரணம்: ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிரிழப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.