Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

ரெட்டிக்கு ஜெயிலும் 5 ஸ்டார் ஓட்டல்தான்…! கவனிப்போ, கவனிப்பு.. மச்சம்டா..!


 
தமிழக அரசில் மிக முக்கியமானவா் சேகா் ரெட்டி. இவா்தான் வெளியே தெரியாத பவா் செண்டா்.
அதிமுகவில் உள்ள அனைத்து முக்கியஸ்தா்களின் பினாமியாகவும் இருப்பவா் இவா்தான்.
மத்திய அரசு, அதிமுக அரசையே வளைப்பதாக நினைத்து சேகா் ரெட்டியை வளைத்து. வீண் போகவில்லை அவரிடம் இருந்து வந்த பல தகவல்கள் தலைமை செயலாளரையே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.
இது மட்டும் அல்லாது அவரது நண்பா்கள் சீனிவாசலு, பிரேம் சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா்.
அடுத்து அமைச்சா்கள், அமைச்சா்களின் மகன்கள் என பெரிய பட்டியலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் உள்ள சேகா் ரெட்டி. 5 ஸ்டார் ஓட்டலில் இருப்பது போன்ற கவனிப்பு, கவனிக்கப்படுகிறதாம்.
அவருக்கு அறுசுவையும் கொண்ட உணவு வீட்டில் இருந்தும்,  5 ஸ்டார் ஓட்டலில் இருந்தும் வருகிறதாம்.
அவா் தமிழக ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளை என்பதால் அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டு அடிக்கடி போன்கள் ஜெயிலுக்கு வருகிறதாம்.
ஜெயிலில் மிக அதிநவீன செல்போனை பயன்படுத்துகிறாராம். இதனால் புழல் ஜெயிலே கோலாகலமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒன்றும் இல்லாதவா்களுக்குதான் அது ஜெயில் அதிக அளவு பணத்தை கொள்ளையடிப்பவா்களுக்கு அது சொர்க்கபுரிதான் என்கிறார்கள். மச்சம்டா மச்சி உனக்கு மச்சம்டா என ஜெயில் வட்டார தகவல்கள் கூறுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.