Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

50 நாள் கெடு முடிகிறது! ஓரிரு நாளில் அடுத்த அதிரடி? தயாராக இருங்கள்! ஐ.. ஐயோ....கண்ணக்கட்டுதே...


நவம்பர் 8 ஆம் தேதி இரவு வந்த ஒரு அறிவிப்பை கேட்ட பலர் இது கனவா அல்லது நினைவா என சிறிது நேரம் மெய்மறந்து போயினர்.

நாட்டில் உள்ள மொத்த பணத்தில் 86 சதவீதம் பங்கு வகிக்கும், 500, 1000 ரூபாய் தாள்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

” 50 நாள் எனக்கு கெடு கொடுங்கள். அதற்கு பிறகு நான் செய்தது தவறாக இருந்தால் என்னை எரித்துக் கொல்லுங்கள்” என உணர்ச்சி ததும்ப பேசினார்.

40 நாள் கடந்த நிலையிலேயே, எதிர்கட்சிகள் பிரதமரை மிரட்டத் தொடங்கி விட்டன. ” 50 நாள் நெருங்குகிறது, என்ன முன்னேற்றம் ஏற்பட்டது” என பிரதமர் விளக்க வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

” 50 நாளிற்கு பிறகு முன்னேற்றம் இல்லாவிட்டால் பதவியை பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்” என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இந்நிலையில் 50 நாள் நெருங்கி விட்டது. பணத் தட்டுப்பாடு ஒரளவு சீரடைந்து விட்டது. மக்கள் கூட்டம் இல்லாத சில ஏ.டி.எம்.களை பார்க்க முடிகிறது.

ஆனால் நாடுமுழுவதும் சில்லரை வர்த்தகம் பழைய நிலைக்கு வந்து விடவில்லை.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பெரு நிறுவனங்கள் கணிசமாக லாபத்தை அதிகரித்துவிட்டன.

இதுவெல்லாம் பண மதிப்பிழப்பு கொள்கைக்கு எதிரான விசயங்களாக கூறப்படுகின்றன.

அதே நேரம்,  இந்த நடவடிக்கை தொடக்கம் தான். இந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் இந்தியா வல்லரசு ஆகி விடாது. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

இதன் காரணமாக 50 நாள் நெருங்கி விட்ட நிலையில், நிச்சயமாக அடுத்த அதிரடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.