Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

500,1000 செல்லாது என்ற அறிவிப்பு முட்டாள்தனமானது -பேராசிரியர் அருண் குமார் சாடல்


"500,1000 செல்லாது என்ற அறிவிப்பு முட்டாள்தனமானது"
-பேராசிரியர் அருண் குமார்.(25 ஆண்டுகளாக கருப்பு பணத்திற்கு எதிராக போராடுகிறவர் !)

"பணப்புழக்கம் குறைய குறைய வருமானம் குறையும்.* *வருமானம் குறைய, தேவைகள் குறையும்.* *தேவைகள் குறைய, உற்பத்தி குறையும்.* *உற்பத்தி குறைய, வேலை வாய்ப்புகள் குறையும்.* *வேலை வாய்ப்பு குறைய, முதலீடுகள் குறையும்.* *முதலீடுகள் குறைய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடையும்.* *பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது நாட்டில் நீண்டகால தீமைகளை ஏற்படுத்தும்."*

"ஒரு மனிதனின் உடலில் இருந்து 85 சதவீதம் ரத்தத்தை எடுத்துவிட்டு, அதிலிருந்து 5 சதவீதம் ரத்தத்தை மட்டும் மீண்டும் செலுத்தினால் என்ன ஆகும் ?* *அவன் செத்துப்போவான்.* *அதுபோலத்தான் 85 சதவீத பணப்புழக்கத்தை நீக்கிவிட்டு 5 சதவீத பணப்புழக்கத்தை அனுமதித்தால் பொருளாதாரம் நாசமாய் போகும்."*

" கருப்புப்பணம், லஞ்சம், ஊழல் ஆகியவற்றால் 97 சதவீத மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.* *அதற்கு தீர்வு காணாமல் ஏழை மக்களை மேலும் மேலும் வதைப்பது அநியாயமல்லவா ?"*

"தெருவில் மிட்டாய் விற்பவனும், காய்கறி விற்பவனும், பிச்சை எடுத்து இரண்டு வேளை அரை வயிறு சாப்பிடுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.* *இவர்களுக்கு 500, 1000 ரூ நோட்டுகளுடன் எந்த தொடர்பும் இல்லை."*

"கருப்புப்பணம் என்பது இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல.* *அது 70 ஆண்டு கால வளர்ச்சியுடையது.* *அதை ஒரு மந்திரக்கோலை கொண்டு ஒரே இரவில் ஒழித்துவிட முடியாது."*

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.