Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க துடிக்கும் 4 அறிவு கொண்ட படித்த அறிவாளிகளே



ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க துடிக்கும் 4 அறிவு கொண்ட படித்த அறிவாளிகளே
அறிவே இல்லாத இந்த நாசா விஞ்ஞானி திருவிழாவிற்க்கு தடை விதிப்பது எப்போது ?????
மூட நம்பிக்கையில் ஊறி போன மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு மூட நம்பிக்கையை கையில் எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அவதிப்படும் சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. கிராம பகுதிகளில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு செல்வதை விட கிராம பகுதிகளில் உள்ள பூசாரிகளை நாடி செல்வதோடு, அவர்...கள் கூறும் பரிகார பூஜை நடத்துவதும் அதிகம் நடக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்படுவோரை பூசாரிகளிடம் அழைத்து செல்லும் போது, பூசாரிகள் பூஜை செய்து விதி வழங்குவதோடு, கிராம மற்றும் நகரப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் செல்லும் போது பயந்து விட்டதாகவும், கறுப்பு அடித்து விட்டதாகவும் கூறி பரிகார பூஜைகள் செய்ய சொல்கின்றனர்.
பரிகார பூஜையே வித்தியாசமாக இருக்கிறது. பரிகார பூஜைக்கு கோழி, பப்பாளி பழம், வெள்ளை பூசனி உள்ளிட்டவைகளை வாங்கி வந்து அதை உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில் தலையை சுற்றி பயந்ததாக கூறப்படும் எடுத்துக்கு உச்சி நேரத்தில் (பகல் 12 மணிக்கு) சென்று அந்த பகுதியில் சிறு, சிறு கற்களை வைத்து வீடு போல் கட்டி அதில் பெரிய கல்லுக்கு சந்தனம், குங்குமம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, அந்த இடத்தில் கோழியை பலியிட்டு, அதன் ரத்தத்தை ஊற்றி விட்டு பப்பாளி மற்றும் வெள்ளை பூசணியை உடைத்து கல்லால் கட்டிய வீட்டின் நான்கு முளையிலும் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள்.
இந்த பரிகார பூஜைக்கு, "பொட்டு வைத்தல்' என, பெயரிட்டுள்ளனர். இது போன்று செய்த பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குணம் அடைவதாக கிராம மக்கள் மத்தியில் அபார நம்பிக்கை உள்ளது. அதே போல் பல இடங்களில் அருள் வாக்கு என்ற பெயரில் குறி கேட்பவர்களின் வீடுகளில் இறந்தவர்கள் பெயரில் குறி சொல்வது உண்டு.இது போன்ற மூட நம்பிக்கையின் காரணமாக பல நேரங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் தேறாமல் மிக மோசமான நிலைக்கு வந்த பின் மருத்துவமனைக்கு அழைத்து வரும் கொடுமைகள் அதிகம் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.