December 24, 2016
அடேங்கப்பா! 3600 கோடியா?
மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சத்ரபதி சிவாஜி மராட்டிய அரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், வல்லமை பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய அரசு விரிவடைய வித்திட்டவர்.
பிரமாண்ட சிலை
மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ உள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும் உயரமானதாக நிறுவப்பட இருக்கிறது.
மோடி வருகை
இந்நிலையில் சத்ரபதி சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையில் ரூ.3600 கோடியில் சிலை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது புனித நீரை தெளித்தும், மண்ணை தூவியும் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ்,சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
அடேங்கப்பா! 3600 கோடியா?
Reviewed by மறத்தமிழன்
on
December 24, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.