December 21, 2016
திருப்பதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் கைது!
திருப்பதியில் செம்மரம் வெட்டி வந்த தமிழகத்தை சேர்ந்த 23 பேரை கைது செய்த போலீசார் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா காவல் நிலைய போலிசார் 23 தமிழக கூலி தொழிலாளிகளை செம்மரம் வெட்டியதற்காக கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 1.5 டன் எடையுள்ள 69 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.
சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் தாரக்கராமநகரில் போலிசார் வாகன சோதனையின் போது செம்மரங்களை வெட்டி கடத்தி வந்ததாக சென்னை கோட்டூரை சேர்ந்த மேஸ்திரி மணி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த 22 கூலி தொழிலாளர்களை கைது செய்தனர்.
இதுவரை இந்த மாதத்தில் மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4.2 டன் எடையுள்ள 189 செம்மரங்களும் 1 லாரியும் 1 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
திருப்பதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.