Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

பாகிஸ்தான் சிறையில் இருந்து 220 இந்தியா மீனவர்கள் விடுதலை நவாஸ் ஷரீப் அரசு நடவடிக்கை


நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 220 பேர் விடுதலை செய்து, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்திய மீனவர்கள் குஜராத் கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். அப்போது ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் போது எல்லை தாண்டி சென்றுவிடுகின்றனர். இதற்கிடையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, பாகிஸ்தான் கடற்படையினர் 220 இந்திய மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நல்லெண்ண் அடிப்படையில் 220 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளதாக மாலிர் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 5ஆம் தேதி, 219 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. எல்லையில் தொடரும் தீவிரவாத பிரச்னை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.