December 15, 2016
17 வயது சிறுவனுடன் நர்சு ஓட்டம்: ஐகோர்ட் நீதிபதி வேதனை
ஆண்களை, பெண்கள் கூட்டி செல்லும் கலிகாலம் வந்துவிட்டது; ஐகோர்ட் நீதிபதி வேதனை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மறவர்காட்டை சேர்ந்த பழனிவேலு மகள் பவித்ரா(20). நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனுடன் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் பவித்ரா, பழனிவேலு, இவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: தற்போது பெண்களே தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வசீகரத்தால் சிறுவன் என்று கூட பார்க்காமல் செல்லும் நிலை உள்ளது. வேதங்களில் குறிப்பிடும் கலிகாலத்தையே இது காட்டுகிறது. பெண்களை கூட்டிக்கொண்டு ஆண்கள் சென்ற நிலை மாறி, ஆண்களை, பெண்கள் கூட்டி செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.
தற்போது புகை பிடிப்பது, மது அருந்தும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். எனவே, 3 பேருக்கும் முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
17 வயது சிறுவனுடன் நர்சு ஓட்டம்: ஐகோர்ட் நீதிபதி வேதனை
Reviewed by மறத்தமிழன்
on
December 15, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.