December 12, 2016
பழவேற்காட்டில் கரையை கடந்த வர்தா புயலின் மையப் பகுதி: 140 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று
திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. இந்நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு கரையை கடக்கத் துவங்கியது. அதிதீவிர வர்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது. புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 4 மணிக்குள் திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காட்டில் கரையை கடந்தது.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை புயலின் கிழக்கு பகுதி கரையை கடக்கும்.
5.30 மணியளவில் அதிதீவிரம், தீவிர நிலையில் இருந்து புயலாக குறையும். இரவு 11.30 மணிக்கு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும்.
புயல் கரையை கடந்தாலும் இரவு 7 மணி வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பழவேற்காட்டில் கரையை கடந்த வர்தா புயலின் மையப் பகுதி: 140 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று
Reviewed by மறத்தமிழன்
on
December 12, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.