Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பரிசு…!! 124 கோடாரி வெட்டு…!! 25 கத்தி குத்து..!!


 
இங்கிலாந்தில் விவாகரத்து கேட்ட மனைவியை 124 முறை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு கடுமையான தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில், சர்ரே கவுண்டி பகுதியில் Sonita Nijhawan (38), Sanjay Nijhawan (46) என்ற தம்பதி வசித்து வந்தனர். கடந்த மே மாதம் Sonita அவருடைய உறவினருக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக Sonita வின் கணவர் Sanjay Nijhawanயை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை தொடர்பான வழக்கு சர்ரே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சஞ்சய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், தான் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் தனது மனைவியை கொலை செய்ததாக அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
ஆனால் அவர் திட்டமிட்டே தனது மனைவியை கொலை செய்ததை நீதிபதிகள் கண்டுபிடித்தனர்.
அவரது மனைவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 124 இடங்களில் வெட்டுக் காயங்களும், 25 இடங்களில் கத்திக் குத்து காயங்களும் இருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சோனிதா தனது கணவர் சஞ்சயிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததாகவும், இது தொடர்பான விவாதத்தின் போது தான் கொலை நடந்திருப்பதும் விசாரணையின் போது தெரியவந்தது.
சஞ்சய் மீதான கொலைக் குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 9 ஆண்டுகள் 172 நாட்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.