Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

11 ஆண்களை திருமணம் செய்த பெண்!!.. பாதிக்கப்பட்ட நான்கு பேர் செய்த காரியம்!!



ஹரியானா மாநிலத்தின், நொய்டாவில் 11 ஆண்களை திருமணம் செய்து, ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திரைப்படத்தில் தான் ஒரு பெண் தொடர்ச்சியாக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதேபோன்ற ஒரு சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. ஆம், மேகா பார்கவ் என்ற 28 வயது மதிக்கதக்க பெண்ணே இத்தகைய மோசடியை செய்தவர்.
பல்வேறு திருமண இணையதளங்களில் பதிவு செய்த மேகா பார்கவ், வசதியான ஆண்களாகத் தேடித் தேடி 11 ஆண்களை திருமணம் செய்துள்ளார். பின்னர், அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த , தங்கம், வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு, எஸ்கேப் ஆவது மேகாவின் வழக்கம்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட நான்கு ஆண்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து துப்பு துலக்கிய நொய்டா போலீசார், மேகா பார்கவ்வை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
திட்டமிட்டு, இத்தகைய மோசடியை ஒரு குடும்பமே அரங்கேற்றிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.