Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

எங்கெல்லாம்... எதற்கெல்லாம் பழைய 500 ரூபாய் பயன்படுத்தலாம்?


வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், மின்சாரம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்வதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த இனி ஆயிரம் ரூபாயை பயன்படுத்த முடியாது. எனினும் பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம்.பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

மேலும் ரிசர்வ் வங்கிகளின் கவுன்டர்களில் பழைய ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டை நகல் அளித்து வரும் மார்ச் 31-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். டிசம்பர் மாதம் 15--ம் தேதி வரை, பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி எந்தெந்த கட்டணங்களைச் 500 ரூபாய்செலுத்த முடியும்? என மத்திய நிதியமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம் :-

  • வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம், பி.எஸ்.என்.எல் தொலைபேசிக் கட்டணம்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் தனிநபர் பெயரிலான குடிநீர் கட்டணம், சொத்துவரித் தொகை.
  • நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அபராதக் கட்டணம்.
  • ரயில் முன்பதிவு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக கவுன்டர்கள், விமானக் கட்டண முன்பதிவு கவுன்டர்கள்.
  • ரயிலில் பயணம் செய்யும் போது, அதில் உள்ள உணவு விடுதியில் உணவு வாங்க. 
  • புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகள் பெற.
  • மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள் மற்றும் 
  • உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில்  மாணவர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 2,000 வரையிலான கல்விக் கட்டணம்.
  • அதிகபட்சம் 500 ரூபாய் வரை, ப்ரீ-பெய்டு மொபைல் ரீ-சார்ஜ் கட்டணம்.
  • கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலைகளில் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்க.
  • நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2 வரை சுங்கவரி ரத்து. டிசம்பர் 2-லிருந்து, 15-ம் தேதி வரை வாகன ஓட்டிகள், பழைய 500 ரூபாய் நோட்டுகளை கட்டணமாக செலுத்தலாம். 
  • வெளிநாட்டினர் வாரத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வெளிநாட்டு கரன்சிகளை மாற்றிக் கொள்ளலாம். அவரது பரிவர்த்தனை பாஸ்போர்ட்டில் இடம்பெறும். 
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.
  • மருத்துவர்களின் பரிந்துரைப்படி, அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்துகள் வாங்க முடியும்.
  • அரசின் பால் வழங்கும் நிலையங்கள்.
  • பொதுத்துறை பெட்ரோல் வழங்கும் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்கவும், சமையல் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்களில் சிலிண்டர்கள் பெறவும்.
  • இறுதிச்சடங்கு மற்றும் தகன மையங்களில் பழைய 500 ரூபாயை அளிக்கலாம்.
  • சர்வதேச விமான நிலையங்களில் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை பழைய 500 நோட்டுகளை பயன்படுத்த அனுமதி. 
  • இந்திய தொல்லியல் துறையின் கீழ் வரும் நினைவுச் சின்னங்களில் நுழைவுக் கட்டணம் பெற. 
  • நீதிமன்றங்களில் அனைத்துக் கட்டணமும் செலுத்தலாம்.
  • அரசின் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.