அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில நாட்களில் கார்டன் திரும்புவார் என அ.தி.மு.க வட்டாரத்தில் தகவல் பரவுகிறது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் சசிகலாவின் ஆதரவைப் பெற்றவர்கள் மட்டுமே கோலோச்சுகின்றனர். துறைரீதியான ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்குக்கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னிடம் நீட்டப்படும் கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறார்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். தொடர்ந்து,
" தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சையில் இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தைக் கவனித்துக் கொள்வது யார் என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலின்பேரில், கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வரின் அதிகாரங்கள் வழங்கப்படுவதாக அறிவித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.' அதிகாரங்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்கவே விரும்பினார் சசிகலா. மத்திய அரசின் அழுத்தத்தின் பேரிலேயே ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் வழங்கப்பட்டன' என்ற தகவல்களும் வெளியாகின. கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக, பொதுநிர்வாகம், உள்துறை உள்ளிட்ட துறைகளைக் கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இதுவரையில் உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா அவரைச் சந்திக்கவில்லை. உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில் காவல்துறை தலைவர், சென்னை மாநகர கமிஷனர் உள்பட யாரும் கோட்டையில் சென்று அவரைச் சென்று சந்திக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
வணிகவரித்துறை அதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் வீரமணி நடத்துகிறார். ஆனால், மாநில மக்களின் நலன்சார்ந்த அதிகாரங்களை வைத்திருக்கும் பன்னீர்செல்வத்துக்கு, ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு சசிகலா தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில், என்ன செய்யப் போகிறோம் என எந்த அறிக்கையும் ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, காவல்துறை ஆணையரிடம் இருந்து மட்டுமே தகவல்கள் வருகிறது. ' என்ன சொல்லப்படுகிறதோ, அதை மட்டுமே செய்ய வேண்டும்' என சசிகலா தரப்பிடம் அனுசரித்துச் செல்கிறார். மாநிலத்தின் உள்துறை பொறுப்பு கைவசம் இருந்தாலும், அப்போலோ மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல்தான் வந்து செல்கிறார். அப்போலோவில் அமர்ந்து கொண்டே, அமைச்சர்களுக்கு சொல்லப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் எடப்பாடி மூலமும் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மூலமும் செயல்படுத்துகிறார் சசிகலா. எந்தப் பணிகளும் இல்லாமல் அப்போலோவுக்கும் கோட்டைக்கும் வந்து செல்கிறார் ஓ.பி.எஸ்" என விவரித்து முடித்தார்.
"மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், விவசாயிகள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பான, ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜு, 'தமிழக விவசாயிகள் எவ்வித சிரமும் இன்றி தங்களின் விவசாயப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக முதலமைச்சர், கடந்த 22-ம் தேதி முன்னோடி திட்டம் ஒன்றை அறிவித்தார்' எனப் பேசியிருக்கிறார். அதிகாரம் இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, அமைச்சர் கூறிய கருத்தால், ஆட்சி நிர்வாகத்தை யார் நடத்துகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது என அதிர வைத்தார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். இதே கேள்வியை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் எழுப்பியிருந்தார். முதல்வரின் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பிறகு, இரண்டு முறை அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார் ஓ.பி.எஸ். அதுவும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தாள்களில் கையெழுத்து வாங்கிவிட்டு, சம்பிரதாயமாக் கூடிக் கலைந்தனர். அந்தக் கூட்டத்தில், முதல்வரின் படம் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்களின் ஆய்வுக் கூட்டத்திலும், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க என்றுதான் பேசுகிறார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில், விவசாய பிரச்னை பற்றி பேசிய விவரங்கள் வெளியானதால், அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
வெளிஉலகிற்கு முதல்வரின் அதிகாரங்கள் ஓ.பி.எஸ் வசம் உள்ளது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், உண்மையில் அதிகாரமில்லாத அமைச்சராகத்தான் அவர் தொடர்கிறார் என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.