தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் யசோதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “நமது நாட்டில் சிறும்பான்மையினரைப் பற்றி காங்கிரஸ் தான் சிந்திக்கிறது. காங்கிரஸில்தான் தலித் சமுதாய மக்களோ, அல்லது தாழ்த்தப்பட்ட மக்களோ, அல்லது முஸ்லீம் மக்களுக்கோ அவர்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளில், சாதாரண ஒன்றிய கவுன்சிலாராக போட்டியிடுவற்குக்கூட பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் அதுபோல ஒரு நிலைமை இல்லை, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை எம்.எல்.ஏ-வாகவோ, அல்லது மந்திரியாகவோ மிக எளிதாக வந்துவிட முடியும்.எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் நாட்டை ஆள வேண்டும்" என்று கூறினார்

அடுத்ததாகப் பேச வந்த திமுக செய்தி தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன், “அவரசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டீர்கள், இந்தியாவில் முதன் முதலாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போலிஸ் கமிஷனராகவும், எம்.எல்.ஏ-வாகவும், ஏன்? மந்திரியாகவும் பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. அவர்இன்று வரை தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காகப் போராடி வருகிறார். அப்படி இருக்க எப்படி நீங்கள் தமிழகத்தில் திராவிட கட்சிகள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மொத்தமாக சொல்ல முடியும், நீங்கள் காங்கிரஸ் கட்சியைப் பற்றி உயர்வாகப் பேசுங்கள். ஆனால் தி.மு.க- வைப் பற்றிக் குறைத்து பேசவேண்டிய அவசியமில்லை" என்று திருமாவளவனுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.