தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல நல்ல விஷயங்களில் செய்திகளில் அடிபட்டாலும் நெகட்டிவாகவும் அவ்வப்போது செய்திகளில் இடம் பிடிப்பார். விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த போது ரூ.7 கோடி செலவில் யாகம் நடத்தியது. தனது சொந்த உபயோகத்துக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் பென்ஸ் பஸ் வாங்கியது. அதுபோல் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் டொயாட்டோ பிரடோ ரக கார்கள் வாங்கியது என சர்ச்சையில் சிக்கியிருந்தார். தற்போது அதிக பொருட் செலவில் புதிய பங்களா கட்டியுள்ளார்.
ஹைதரபாத் நகரின் இதயப் பகுதியான பேகம்பெட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த காம்ப்ளக்சுக்கு 'பிரகதி பவன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த காம்ப்ளக்சில் இரு கட்டிடங்கள் இருந்தன. அவை ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் முக்கிய விருந்தினர்கள் தங்கும் விடுதியாகவும் அதிகாரிகள் ஓய்வெடுக்கும் பங்ளாவாகவும் மாற்றப்பட்டிருந்தது.
தற்போது அதனுடன் சேர்த்து புதியதாக 3 புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் சந்திரசேகரராவ் குடும்பத்தினருக்காக பெரிய பங்ளா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் உளவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கும் இங்கு புதிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 250 பேர் அமர்ந்து சினிமா பார்க்கக் கூடிய தியேட்டர், சந்திரசேகர ராவ் மக்களை சந்திப்பதற்காக 'ஜனஹிதா' என்ற கான்பெரன்ஸ் ஹால் போன்றவை புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. ஆடிட்டோரியமும் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் அத்தனை அறைகளிலும் புல்லட் புரூப் வசதியுடன் கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பாத்ரும் கூட புல்லட் புரூப் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காம்ப்ளக்சை கட்டுவதற்காக தொடக்கத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது செலவு ரூ.50 கோடி வரை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. டாடா குழுமத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியின் சபூர்ஜி பலோன்ஜி ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்த காம்ப்ளக்சை கட்டியுள்ளது. ஒவ்வொரு கட்டிடமும் வாஸ்து பார்த்து கட்டப்பட்டுள்ளது.
பேகம்பேட்டில் தெலுங்கானா மாநில செகரட்டரியேட் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடத்தின் 6வது தளத்தில் முதல்வரின் அறை இருந்தது. கடந்த ஒரு வருடமாக சந்திரசேகரராவ் தெலுங்கானா செக்கரட்டரியேட்டில் உள்ள தனது முதல்வர் அறைக்குச் செல்வதில்லை. தனது கேம்ப் ஆபிசிலேயே இருந்தே அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தார். அதனால்தான் புதியதாக இவ்வளவு செலவழித்து அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா காம்ப்ளக்ஸ் எழுப்பப்பட்டுள்ளது.
தனக்காக எழுப்பப்பட்டிருந்த புதிய பங்ளாவில் சந்திரசேகர ராவ் இன்று குடியேறினார். அதிகாலை 5.22 மணிக்கு புதிய வீட்டின் கிரகப் பிரவேசம் நடந்தது. ஸ்ரீ திரிதாண்டி ஸ்ரீமன் நாராயண ராமனுஜ சின்ன ஜீயர் அதிகாலையில் பூஜைகளை நடத்தினார். பின்னர், சந்திரசேகர ராவும் அவரது மனைவியும் புதிய பங்ளாவுக்குள் காலடி எடுத்து வைத்தனர். தெலுங்கானா மாநில ஐடி துறை அமைச்சரும் சந்திரசேகரா ராவின் மகனுமான கே.டி ராமராவ், மகள் நிஜாமாபாத் தொகுதி எம்பி கவிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கிரகப்பிரவேச விழாவில் கலந்து கொண்டனர்.
வழக்கமாக கேஎஸ்ஆருடன் எல்லா விழாக்களிலும் ஒருங்கே பங்கேற்கும் தெலுங்கானா மாநில கவர்னர் ஈஎஸ்எல். நரசிம்மன் கடைசியாகத்தான் விழாவில் பங்கேற்றார். மக்கள் வரிப்பணத்தில் சந்திரசேகரராவ் ஆடம்பர பங்களா கட்டியுள்தாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. அதனால், விழாவில் பங்கேற்க கவர்னர் சற்று தாமதாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் சந்திர சேகர ராவின் கேபினட்டில் உள்ள முக்கிய அமைச்சர்களும் கிரகப் பிரவேசத்தை புறக்கணித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.