”சரவணா ஸ்டோர்ஸ்ல எல்லாமே விலை கம்மியா கிடைக்கும்.
அப்படியா? 500ரூ நோட்டு 450ரூபாய்க்கு கிடைக்குமா?”
சரவணா ஸ்டோர்ஸ் பிரபலமாக தொடங்கியபோது வாய்மொழியாகவே வைரல் ஆன ஜோக் இது. காலச்சக்கரம் சுற்றியதில் இந்த டிரெண்ட் ஆன்லைனுக்கு மாறிவிட்டது.
ஐஐடி மாணவர் ஒருவர் தன்னையே ஒரு நுகர்வு பொருளாக நினைத்து, தனக்கு ஒரு விலை நிர்ணயித்து ஒரு ஷாப்பிங் போர்ட்டலில் விற்பனைக்கு வந்தார். olx நிறுவனம் வந்த புதிதில் “என் பொண்டாட்டியை யாராவது வாங்குக்கிறீங்களா” என நக்கல் போஸ்ட் போட்ட கதையும் உண்டு. இந்த டிரெண்டில் சமீபத்தில் சேர்ந்த புது விஷயம் 2000 ரூபாய் நோட்டு
ஆம், ஏ.டி.எம்களில் பெரிய க்யூ. வங்கிக்கு சென்றாலும் 4500 ரூபாய்தான் என ஏகப்பட்ட கெடுபிடிக்கு நடுவே நேற்று ஒரு இணைய தளத்தில் 2000 நோட்டு கட்டு விற்பனைக்கு வந்தது. ஆன்லைன் மூலமாக பேமெண்ட் கட்டிவிட்டால், 2000 ரூபாய் கட்டு வீடு தேடி வரும் என்றது அந்த அறிவிப்பு. சிறிது நேரத்திலே உஷாரான தளத்தின் அட்மின்கள், அதை நீக்கிவிட்டார்கள். எந்த நுகர்வோரும் 2000 ரூபாய் கட்டை வாங்கவில்லை என்றும் சொன்னார்கள். பழைய நாணயங்களைச் சேர்க்கும் பழக்கமிருப்பவர்கள் அதை ஆன்லைனில் விற்பதுண்டு. ஆனால், புழக்கத்தில் இருக்கும் நோட்டை ஒருவர் அதிக விலைக்கு விற்க நினைத்தது இதுவே முதல் முறை.

வேறு என்ன என்ன வித்தியாசமான விஷயங்களை விற்கிறார்கள் என தேடிய போது நம் கண்ணில் பட்டது முத்திரைத்தாள்கள். குறிப்பிட்ட முகவர்களிடம், சான்றுகளை காட்டி மட்டுமே வாங்க முடிகிற முத்திரைத்தாள்களை ஆன்லைனில் விற்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து பதிவுத்துறையை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். ஸ்டாம்ப் பேப்பரை ஆன்லைனில் விற்கலாம். ஆனால், யாரிடம் இருந்து யார் வாங்குகிறார்கள் என்ற தகவல்கள் முக்கியம் என்றார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.