Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

தனுஷ்கோடியின் புதிய சாலைகள்... திறப்புக்கு முன்னரே அரிக்கும் ஆவேச அலைகள் !


தனுஷ்கோடிக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலை கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறக்கப்படாத நிலையில், கடல் அலைகளால் அரிக்கப்பட்டுள்ளது. முழு சாலைகளும் சேதமடையும் முன்னர் இதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் பரபரப்பாய் இயங்கிய தனுஷ்கோடி, இன்று ஆள் ஆரவாரமற்று காட்சியளிக்கிறது. கப்பல் துறைமுகம், ரயில் நிலையம் என ஆயிரக்கணக்கான பயணிகளை தினந்தோறும் பார்த்து வந்த தனுஷ்கோடி, 52 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆழிப்பேரலை தாக்குதலில் சூறையாடப்பட்டது நகரம். அதன் பின்னர் வாழத்தகுதியற்ற ஊர் என அறிவிக்கப்பட... இப்போது பாழடைந்து கிடக்கிறது. ஆனால் இன்னும் உயிர்ப்போடு அழகாகவே காட்சியளிக்கிறது.

அதன் பின்னர் தனுஷ்கோடிக்கு செல்ல சாலை அமைக்கப்படவில்லை. குடிநீர், மின்சாரம் என எந்த வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. தனித்தீவாக காட்சியளிக்கிறது தனுஷ்கோடி.

சிதைந்து போனாலும் உயிர்ப்போடு இருக்கும் பவளப்பாறைகள் கட்டடம், அழகான அந்த தீவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவே செய்தது. சாலை வசதி இல்லாவிட்டாலும், தனியார் வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி சென்று அந்த அழகிய தீவை, சிதைந்து வரலாற்றின் சாட்சியாக நிற்கும் அந்த பவளப்பாறை கட்டடங்களை பார்க்கச் சென்றனர்.  இவர்கள் தவிர வாழ்வாதாரத்துக்காக சில மீனவர்கள் அங்கு குடிசை அமைத்து தங்கி இருக்கிறார்கள்.

தனுஷ்கோடியில் உள்ள வரலாற்று சின்னங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதை சுற்றுலா பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதையடுத்து 52 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ்கோடிக்கு புத்துயிர் ஊட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.



முதல் கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி துவங்கியது. ரூ.50 கோடி செலவில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து 9 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி 2014-ம் ஆண்டு துவங்கியது. இந்த பாலப்பணிகள் அண்மையில் முடிவடைந்து திறப்பு விழாவுக்குத் தயாராக நிற்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வங்க கடலில் ஆவேச அலைகள் அடித்து வருகின்றன. இந்த அலைகளில் சிக்கிய புதிய சாலை சுமார் 20 அடி தூரத்துக்கு அரிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. புயல் காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம். அத்தகைய புயல் காலத்தின் துவக்கத்திலேயே உருவான அலைகளுக்கே இந்த புதிய சாலை தாங்காமல் அரித்து சேதமடைந்து விட்டது. இந்த சாலை முற்றிலும் சேதமடையும் முன் சாலையினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.